| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் TVK

உரிமையை உணரச் செய்ய வேண்டும்...! மேடையில் அதிரடி பேச்சு..! கொண்டாடும் தொண்டர்கள்...!

by Vignesh Perumal on | 2025-12-18 01:08 PM

Share:


உரிமையை உணரச் செய்ய வேண்டும்...! மேடையில் அதிரடி பேச்சு..! கொண்டாடும் தொண்டர்கள்...!

"மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்குச் செய்யும் நலத்திட்டங்களை 'இலவசம்' என்று சொல்லி சிறுமைப்படுத்த வேண்டாம்" என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசினார். மேலும், 2026 தேர்தலில் களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

அரசின் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய விஜய், 'இலவசம்' என்ற சொல்லாடலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

"நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. ஆனால், மக்களுக்கான திட்டங்களை, சலுகைகளை 'இலவசம்' என்று சொல்லி, மக்களை அசிங்கப்படுத்துவதில் எனக்குச் சிறிதும் உடன்பாடு கிடையாது. மக்களிடம் வரிப்பணமாக வாங்கிய காசில், அவர்களுக்கே நலத்திட்டங்களைச் செய்வதை எப்படி நீங்கள் இலவசம் என்று சொல்வீர்கள்? அது மக்களின் உரிமை, அதை அவர்களுக்குத் திருப்பித் தருகிறீர்கள், அவ்வளவுதான்," என்று அவர் குறிப்பிட்டார்.

தனது அரசியல் எதிரிகள் குறித்துக் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய விஜய், தேவையற்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எதிரிகள் யார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டுத்தான் களத்திற்கு வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. 2026 தேர்தலில், களத்தில் நேரடியாக நின்று நம்மை எதிர்ப்பவர்களைத் தான் நாங்கள் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்தத் திட்டமும் (Idea) எங்களிடம் இல்லை."

இதன் மூலம், தற்போதைய ஆளுங்கட்சி மற்றும் நேரடி அரசியல் எதிரிகளை மட்டுமே தவெக குறிவைக்கும் என்பதையும், கடந்த கால விவகாரங்களையோ அல்லது தேவையற்ற தரப்பினரையோ விமர்சித்து நேரத்தை வீணடிக்கப் போவதில்லை என்பதையும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.


ஈரோடு விஜயமங்கலம் அருகே நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், விஜய் மிக எச்சரிக்கையுடனும் அதே சமயம் அரசியல் தெளிவுடனும் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

"மக்களைக் கவர இலவசம் என்ற பெயரைப் பயன்படுத்தாமல், அது அவர்களின் உரிமை என்பதை உணரச் செய்ய வேண்டும்" என்ற விஜய்யின் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment