| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்...! 125 நாள் வேலைத் திட்டம்...! எடப்பாடிக்கு முதல்வர் கடும் கண்டனம்...!

by Vignesh Perumal on | 2025-12-18 12:48 PM

Share:


மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்...! 125 நாள் வேலைத் திட்டம்...! எடப்பாடிக்கு முதல்வர் கடும் கண்டனம்...!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGA) முடக்கிவிட்டு, புதிய பெயரில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை வரவேற்பதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏழைகளுக்குப் 'பச்சைத் துரோகம்' இழைத்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள VBGRAMG (Viksit Bharat Rural Abhiyan MGNREGA) திட்டம் குறித்து முதலமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "100 நாள் வேலைத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டு, ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது வெறும் ஏமாற்று வேலை. 125 வேலை நாட்கள் என்பது வெறும் காகிதத்தில் (Paper) மட்டுமே இருக்கப் போகிறது என்று சமூக ஆர்வலர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் திட்டத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி முதலமைச்சர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

"மக்களைக் காக்கக் குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாக ஒரு பொய்யை அவர் அவிழ்த்து விட்டுள்ளார். 125 நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கும் என்பது அவருக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தே மக்களை ஏமாற்றுகிறாரா?"

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய திட்டத்தை ஆதரிப்பதன் மூலம், எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்குப் 'பச்சைத் துரோகம்' செய்துவிட்டதாக முதல்வர் சாடியுள்ளார். "மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத செயல்" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டு அதன் பெயரை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதில் வேலை நாட்கள் 125 ஆக உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டாலும், நிதி ஒதுக்கீடு மற்றும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனை முன்னிறுத்தியே திமுக மற்றும் அதிமுக இடையே தற்போது கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment