| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். எஸ் பி அறிவுரை...!!!

by admin on | 2025-12-18 11:48 AM

Share:


நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். எஸ் பி அறிவுரை...!!!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று17.12.2025  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. K. கோடீஸ்வரன், திரு. V. ரகுபதி மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த நவம்பர் மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த  துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. E. பாலகிருஷ்ணன் காவல் ஆய்வாளர்கள் திரு. அம்பேத்கார், திரு. சந்துரு, திரு. தர்மலிங்கம், திரு. பிரேம்குமார், திரு. பார்த்தசாரதி, திருமதி. பாரதி, திரு. சிவானந்தன், உதவி ஆய்வாளர்கள் திரு. குப்புசாமி, திரு. தவச்செல்வம், திருமதி. உத்திரமாள், திரு. நடராஜன், திரு. சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 55 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment