| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

என் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை..! நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் அதிருப்தி...!

by Vignesh Perumal on | 2025-12-17 05:07 PM

Share:


என் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை..! நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் அதிருப்தி...!

மதுரையில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரிகள் மீது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் காணொளி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய பிறகும், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியதாவது: "நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அதிகாரிகள் அந்த உத்தரவை மதிக்கவில்லை. தீபமேற்ற உத்தரவிட்ட பிறகு திட்டமிட்டு 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்?. நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் இருக்கச் சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்."

அதிகாரிகளின் இத்தகைய செயல்பாடு நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இது குறித்து விரிவான விளக்க மனுவைத் தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கினார்.

நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் காணொளி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசு எந்தவிதமான உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள உத்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது."

"அந்தப் பகுதியில் நிலவும் சட்டம் - ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டே சில கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன."

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் அரசு தரப்பின் விளக்கத்தை விரிவான மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்த விவாதம் தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











ஆசிரியர்கள் குழு....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment