by satheesh on | 2025-12-17 11:26 AM
செந்தில்பாலாஜி பார்முலாவை பின்பற்றும் கே என் நேரு ... நெஞ்சுவலி திடீரென சிகிச்சை... அமலாக்கத்துறை கைதில் இருந்து தப்பிக்க நடக்கும் நாடகம். இதற்கு முன்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனையை மேற்கொன்டு, செந்திபாலாஜியை கைது செய்ய முயன்ற போது, தீடிரென அப்போது அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி நெஞ்சு வலிக்கிறது என துடிக்க, உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவசர வசரமாக செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இருந்தாலும் அமலாக்கதுறை விடுவதாக இல்லை அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது, சுமார் ஒன்றரை வருடம் போரட்டத்திற்கு பின்பு சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி. இந்நிலையில் செந்தில்பாலாஜி பார்முலா தற்பொழுது அமைச்சர் கே என் நேரு விவகாரத்தில் அரங்கேறி வருவது அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர் கே என் நேரு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அமைச்சர் கே என் நேரு துறைசார்ந்த வேலை வாய்ப்புக்காக ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய 232 பக்கம் கொண்ட ஆவணங்கள் டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ள அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்குமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்குக் கடிதம் அனுப்பியது. இருந்தும் தமிழக காவல் துறை அமைச்சர் கே என் நேரு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அடுத்து இரண்டாவது கடிதத்தை தமிழக காவல் துறைக்கு அனுப்பியது அமலாக்க துறை. அதில் அமைச்சர் கே.என். நேரு நகராட்சி நிருவாகத் துறையில் ஒப்பந்தங்களுக்கு லஞ்சம், வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் என ரூ. 1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிட்டு அமலாக்கத்துறை, இதன் அடிப்படையில் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு வலியுறுத்தி இருந்தது அமலாக்கத்துறை. தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டிய டிஜிபி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வழக்குப்பதிய வேண்டியவருக்கே நெஞ்சுவலி என்றால் அதில் சிக்கி இருக்கும் அமைச்சர் என்ன கதியில் இருப்பாரோ என்ற விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. மேலும் செந்தில்பாலாஜி பார்முலாவை பின்பற்றுகிறார் அமைச்சர் கே என் நேரு என்றும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது, ஆனால் கே என் நேரு விவகாரத்தில், கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்யவேண்டிய காவல்த்துறை அதிகாரிக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது. இருந்தும் அமைச்சர் கே என் நேருவுக்கு அமலாக்கத்துறை நெருக்கடி இன்னும் அதிகரிக்கும் போது, செந்தில் பாலாஜி போன்று வரும் நெஞ்சுவலி என்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவாரா.? என்கிற விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் ஒரு பக்கம் அனல் பறந்து வருகிறது. மறுபக்கம் தேர்தல் நெருங்க நெருக்க அமலாக்கத்துறை கொடுக்க இருக்கும் நெருக்கடியில் இன்னும் எத்தனை அமைச்சர்களுக்கு நெஞ்சுவலி வர இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என எதிர்கட்சி தரப்பினர் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடதக்கது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!