| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

லஞ்சம் - அடம் பிடித்த அதிகாரி - அதிரடி கைது :

by satheesh on | 2025-12-17 09:08 AM

Share:


லஞ்சம் - அடம் பிடித்த அதிகாரி - அதிரடி கைது :

ராமநாதபுரம் ;   முதுகுளத்தூர் தாலுகாவை  சேர்ந்த  புகார்தாரர் (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) முதுகுளத்தூரில் சென்ற மாதம் புதிதாக லைசென்ஸ் பெற்று பூச்சி கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாள்களாக  வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் 50/25 என்பவர் மனுதாரர் கடைக்கு வந்து நான் தான் உனக்கு லைசன்ஸ் கொடுத்த அதிகாரி  எனக்கு அலுவலக செலவு நிறைய இருக்கு அதனால எனக்கு ரூ. 15,000/- ம் கொடுக்குமாறு முதலில் கேட்டுள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் மனுதாரருக்கு மீண்டும் போன் செய்து நான் கேட்ட பணம் ரூ. 15,000/-ம் என்னாச்சு என கேட்டார், அதற்கு நான் அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியாது என சொன்னதற்கு ரூ. 5,000/-ம் குறைச்சுக்கிட்டு ரூ.10,000/-ம் கொடு என கேட்டுள்ளார். பின்பு, இன்று காலை மீண்டும்  போன் செய்து  நான் கேட்ட பணத்தில் ரூ.2000/-ம் குறைத்து ரூ. 8000/- யாவது மாலை 3 மணிக்கு என் ஆபிஸில் வந்து கொடு என  கேட்டுள்ளார். எனவே, லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினரின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.8000/-ஐ வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமனிடம்  கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர்  அவரை இன்று (15.12.2025) ம் தேதி கையும் களவுமாக பிடித்தனர். மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment