| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

வத்தலக்குண்டில் சுடுகாடு அருகே 2 இளைஞர்கள் கைது...!

by Vignesh Perumal on | 2025-12-15 04:32 PM

Share:


வத்தலக்குண்டில் சுடுகாடு அருகே 2 இளைஞர்கள் கைது...!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன் அவர்களின் உத்தரவின் பேரில், காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் ஷேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் கொண்ட குழுவினர், நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி சுடுகாடு அருகில் சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். அங்குச் சென்று விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கட்டகாமன்பட்டியைச் சேர்ந்த கதிரவன் மகன் பகவத் (20), பூமிநாதன் மகன் பாண்டித்துரை (21) ஆகிய 2 பேரையும் போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இருவர் மீதும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வத்தலகுண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில், பகவத் மற்றும் பாண்டித்துரை ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியான சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment