| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

என்னால் தான் அமைச்சரானார்...! வேதனையாக உள்ளது...! பரபரப்பு பேட்டி...!

by Vignesh Perumal on | 2025-12-15 11:33 AM

Share:


என்னால் தான் அமைச்சரானார்...! வேதனையாக உள்ளது...! பரபரப்பு பேட்டி...!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி குறித்துப் பா.ம.க. கௌரவத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வான ஜி.கே. மணி ஒரு பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார். அப்போது அவர், அன்புமணி மத்திய அமைச்சராவதற்குத் தான் முக்கியக் காரணமாக இருந்ததாகவும், கட்சியின் வளர்ச்சிக்கு ராமதாஸே முக்கியக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.கே. மணி பேட்டியில் தெரிவித்ததாவது: "அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்குமாறு ராமதாஸை நான்தான் சம்மதிக்க வைத்தேன். இதுகுறித்து நான் அவரிடம் பேசும்போது ராமதாஸ் என் மீது மிகவும் கோபப்பட்டார். அன்புமணிக்கு எந்த வகையிலும் நான் கெடுதலோ, துரோகமோ நினைத்ததில்லை."

அன்புமணியை மத்திய அமைச்சராக்குவதில் டாக்டர் ராமதாஸுக்கு இருந்த தயக்கத்தை நீக்கி, அதற்குச் சம்மதிக்க வைத்ததில் தனது பங்கு முக்கியமானது என்றும், அன்புமணிக்குத் தான் ஒருபோதும் துரோகம் நினைத்ததில்லை என்றும் ஜி.கே. மணி அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

கட்சியின் வளர்ச்சி குறித்துப் பேசிய ஜி.கே. மணி, டாக்டர் ராமதாஸின் தியாகத்தையும் உழைப்பையும் நினைவு கூர்ந்தார். "35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். இன்றைக்குப் பா.ம.க. வளர்ந்ததற்கு ராமதாஸ் தான் முக்கிய காரணம். ராமதாஸ், பாளையங்கோட்டை சிறைக்குத் தான் செல்லவில்லை; மற்ற எல்லாச் சிறைக்கும் சென்றுவிட்டார்.

ராமதாஸ் தனது இளமைக் காலம் முதலே கட்சியையும் சமுதாயத்தையும் வளர்ப்பதற்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றதையும், அதன் மூலம் தான் கட்சி வளர்ந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பா.ம.க.வில் நிலவும் சில கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசிய ஜி.கே. மணி, அன்புமணி ராமதாஸ் தன்னைக் குற்றஞ்சாட்டுவது குறித்து வேதனை தெரிவித்தார். மேலும் "என்னைப் பார்த்து... எங்கள் கட்சியில் உழைத்தவர்களைப் பார்த்து... ராமதாஸ் உடன் இருப்பவர்களை எல்லாம் பார்த்து துரோகி என்கிறார் அன்புமணி. 'ஜி.கே. மணி தான் என்னையும் எங்க அப்பாவையும் பிரித்துவிட்டார்' என்று சொல்கிறார். இதெல்லாம் எவ்வளவு வேதனையாக இருக்கும்."

அன்புமணியின் இத்தகைய விமர்சனங்கள், தியாக உழைப்பாளிகளைப் பாதிப்பதாகவும், தன்னையும் ராமதாஸையும் பிரித்தது தான் தான் என்று அன்புமணி சொல்வது மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும் பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே. மணி வேதனையுடன் தெரிவித்தார்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment