| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

புதிய கட்சி தொடங்குகிறாரா? 23ம் தேதி முக்கிய ஆலோசனை - O P S அதிரடி!

by Satheesh on | 2025-12-15 08:04 AM

Share:


புதிய கட்சி தொடங்குகிறாரா?  23ம் தேதி முக்கிய  ஆலோசனை - O P S அதிரடி!

டிச.23.. முக்கிய முடிவை எடுக்கும் ஓ பன்னீர் செல்வம்? பண்ருட்டி தலைமையில் நடக்கப்போகும் ஆலோசனை!இன்று, 15ம் தேதி  நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக்கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பின் அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார். பாஜக உடன் இணக்கமான சூழ்நிலையிலும் இருந்த ஓ. பன்னீர்செல்வம், தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி கடந்த ஜூலை மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மீண்டும் NDA கூட்டணியில் இணைகிறாரா? என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், திடீரென 

 ஓ. பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம் என்று பேச்சு எழுந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லிக்கு சென்ற ஓ. பன்னீர்செல்வம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பி.எஸ்., தனிக்கட்சி தொடங்கப்போவதாக நான் ஒருபோதும் கூறவில்லை என்றார். அதுமட்டும் இன்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து டிசம்பர் 15 ஆம் தேதி முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறிய நிலையில், அந்த கூட்டத்தையும் ரத்து செய்தார். இதனால் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளாரா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர டெல்லி பாஜக மேலிடம் விரும்புகிறது. இதனிடையே, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் எனக் குறிப்பிட்டுள்ளதால், அவரது புதிய கட்சியின் பெயர் இதுதானா? என்ற விவாதம் தமிழக அரசியலில் எழுந்துள்ளது. மேலும், 23ம் தேதியாவது முடிவை அறிவிப்பாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.!

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment