by Vignesh Perumal on | 2025-12-14 11:20 AM
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பழனி துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) திரு. தனஞ்ஜெயன் அவர்களின் உத்தரவின் பேரில், ஆயக்குடி காவல் நிலையச் சார்பில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கத் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆயக்குடி காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான காவலர்கள், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பழைய ஆயக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாகச் செயல்பட்ட காவல் துறையினர், அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பழைய ஆயக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை (23), காஜாமைதீன் (24), அருள்தாஸ் (25) ஆகிய மூவர் என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த 150 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் மீதும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி அருகே கஞ்சா விற்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!