by admin on | 2025-12-13 07:14 PM
ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுருத்தி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பங்களிப்பு கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுருத்தி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் அப்துல் நஜிபுதீன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்ட செயலாளர் லிங்கதுரை,தமிழ்நாடு உயர் கல்வி மேல்நிலைப்பள்ளி,பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணன்,தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாவட்டத்தலைவர் பழனிக்குமார்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர், 9842337244