| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

வீட்டின் கதவை உடைத்து " சவுக்கு சங்கர் " கைது - பின்னணி என்ன. ?

by satheesh on | 2025-12-13 06:37 PM

Share:


வீட்டின் கதவை உடைத்து " சவுக்கு சங்கர் " கைது  - பின்னணி என்ன. ?

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக திகழ்பவர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருகிறார். இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். அதேவேளை, சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இவர் மீது 20-ற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.  அதனால், சுமார் 4 அல்லது 5 மாதத்திற்கு ஜாமினில் வெளி வர முடியாது எனவும் , அதனாலயே,  கோர்ட் விடுமுறை தினமான இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment