by satheesh on | 2025-12-13 02:27 PM
கன்னியாகுமரி ; மாவட்டத்தில் பல இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக திமுக மகளிரணி தலைவி என கூறி கோடி கணக்கில் பணத்தை சுருட்டிய அரசு மின்வாரிய பெண் பணியாளர் மீது வடசேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு. பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்த இளைஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (27). பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் அமைந்துள்ள மின் வாரிய அலுவலகத்தில் பணிப்புரியும் பெண் ஊழியர் கீதா என்பவர் வீட்டிற்கு சில நாட்கள் கார் டிரைவராக சென்ற நிலையில் பெண் ஊழியரின் மகன் ராகுல் என்பவர் ஜீவா வை தொடர்ந்து தங்கள் வீட்டு கார் டிரைவராக பணியாற்ற அழைத்துள்ளார். அதன் பேரில் தொடர்ந்து டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில் அவரிடம் தனது தாய் கீதா திமுக மகளிரணி தலைவியாக இருப்பதாகவும், மின்வாரியத்தில் தற்போது அரசு டிரைவர் பணி காலியிடம் நிரப்ப உள்ளதால் பணம் கொடுத்தால் உடனடியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் ஆசை வார்த்தை கூறி முதற்கட்டமாக 3 லட்சம் ரூபாயும் இரண்டாம் கட்டமாக 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார் கீதா. தொடர்ந்து பல துறைகளில் டிரைவர் பணி நிரப்ப உள்ளதால் உடனடியாக பணம் கொடுக்கும் நபர்களுக்கு வேலை நிச்சயம் பண்ணப்படும் என கூறியதன் அடிப்படையில் ஜீவா தனது நண்பர்களிடம் இருந்தும் பல லட்சம் ரூபாய் பெற்று கீதா விடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பல நாட்கள் கடந்த பின்பும் பணி கிடைக்காத நிலையில் இது குறித்த கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், கீதா தற்போது பணிமாறுதல் பெற்று ஊட்டியில் மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இது குறித்து ஜீவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ஜீவா மீது பழி வாங்கும் நோக்கில் மர்ம நபர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறி மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜீவா புகார் அளித்துள்ளார். திமுக மகளிரணி தலைவி என கூறி தன்னையும் தன் நண்பர்களையும் வேறு சிலரையும் ஏமாற்றி கோடி கணக்கில் பணம் மோசடி செய்த மின் வாரிய பெண் ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், பல நபர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டிய ஜீவா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பகுதியில் வசித்து வரும் ஏயேசு ராஜன் என்பவரிடம் இருந்து மட்டும் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாகவும் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் அவர்களிடமிருந்தும் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார் இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் பெயர் மற்றும் போன் நம்பரும் கொடுத்துள்ளதாகவும் கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் மேலும் உடனடியாக இவர்களை கைது செய்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கையில் வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!