by admin on | 2025-12-13 12:38 PM
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்க ‘’வெல்லும் தமிழ்ப் பெண்கள்’’ தமிழ்நாட்டின் சாதனைப் பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தேனி மாவடத்தில் 1750 மகளிர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.12.2025), சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், ‘’வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தமிழ்நாட்டின் சாதனைப் பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட எல்.எஸ்.மில் அருகில், தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.என்.இராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), திரு.ஆ.மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி), திரு.கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் 1750 மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் மகளிர் விடியல் பயணத் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், உயர்கல்விக்கு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கம் வகையில் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2,000 வழங்கிடும் அன்புக்கரங்கள் திட்டம், விபத்திற்கு உள்ளான நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும்”நம்மைக் காக்கும் 48” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.குறிப்பாக, குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுய மரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 15.09.2023 அன்று தொடங்கி வைத்தார்கள்.
தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், இதுநாள் வரை 2,18,686 மகளிர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- உரிமைத்தொகை பெற்று வருகின்றார்கள்.பொதுவாக, அரசு எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தப்படுகிற போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஏற்கபடாதவர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கின்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி மேல்முறையீடு செய்தவர்களில் இன்றைய தினம் 1750 மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்ற பெண்கள் தெரிவித்ததாவது,
என் பெயர் ராஜேஸ்வரி. நான் தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியில் வசிக்கின்றேன். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்டத்தில் மாதம் ரூ.1000/- பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை பெற்றுள்ளேன். இத்தொகை எங்களை போன்ற மகளிர்களுக்கு பேருதவியாக இருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என் பெயர் ரேணுகா. நான் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கதிர்நரசிங்காபுரம் பகுதியில் வசிக்கின்றேன்.இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு நான் தகுதிபெற்றுள்ளேன். இத்தொகை எனது அன்றாட செலவுகளுக்கு பேருதவியாக இருக்கும். இதனை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் பெயர் கவிதா. நான் தேனி மாவட்டம், இராசிங்காபுரம் பகுதியில் வசிக்கின்றேன்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தின் மூலம் இன்று எங்களுக்கு உரிமைத்தொகை கிடைத்துள்ளது. இதனை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மகளிர் விடியல் பயணம் மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள். இத்கைய சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பெண்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்நிகழ்வில் நகர்மன்றத் தலைவர்கள் திருமதி வனிதா நெப்போலின் (கம்பம்), திருமதி அய்யம்மாள் ராமு (சின்னமனூர்), பேரூராட்சித் தலைவர் திருமதி கீதாசசி (வீரபாண்டி), திருமதி இலட்சுமி (பண்ணைப்புரம்), திருமதி சுந்தரி (க.புதுப்பட்டி), திரு.கவியரசு (பூதிப்புரம்), திரு.பால்பாண்டி (தாமரைக்குளம்), திரு.நாகராஜ் (தென்கரை), திருமதி சந்திரகலா (ஆண்டிபட்டி) மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெரால்டு அலெக்சாண்டர், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.சண்முகசுந்தரம், இணை இயக்குநர் (ஊரகம் மற்றும் மருத்துவ நலப்பணிகள்) மரு.கலைச்செல்வி, துணை காவல் கண்காணிப்பாளர் (சமூகநீதி) திரு.முத்துராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு. திரு.வில்லியம் ஜேசுதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.நல்லையா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சியாமளாதேவி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகமது, வட்டாட்சியர்கள் திரு.சதீஸ்குமார் (தேனி), திரு.மருதுபாண்டி (பெரியகுளம்), திரு.ஜாஹிர் உசேன் (ஆண்டிபட்டி), திரு.சந்திரசேகரன் (போடிநாயக்கனூர்), திரு.கண்ணன் (உத்தமபாளையம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.9842337244
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!