by admin on | 2025-12-12 07:13 PM
கும்பகோணம் மதுபானப் பார் அகற்றக்கோரி கொடுக்கப்பட்ட மனு மீது வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்காத நிலையில் தவெகவினர் எதிர்ப்பு போராட்டம்!
கும்பகோணம்: உச்சிப் பிள்ளையார் கோவில் மற்றும் சோமேஸ்வரர் கோவில் அருகில் கடந்த மாதம் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானப் பாரை பொதுமக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி அகற்ற வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர், போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கடந்த மாதம் (17ஆம் தேதி) தமிழக வெற்றி கழகத்தினர் வருவாய் கோட்டாட்சியர் ஹிருத்யா விஜயன் இ.ஆ.ப அவர்களிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று (டிசம்பர் 12) தமிழக வெற்றி கழகத்தினர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
முன்னதாகசட்டம் ஒழுங்கு பாதுகாப்புக் கருதி, கிழக்கு காவல் ஆய்வாளர் சிவ செந்தில் குமார் தலைமையிலான காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் முற்றுகையிட முயன்ற மாவட்டச் செயலாளர் வினோத் ரவி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரை அதிரடியாக கைது செய்து மினி பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
நிருபர் அ, மகேஷ்
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!