by admin on | 2025-12-12 01:33 PM
தேனி யில் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு
தேனி மாவட்டத்தின் தனித்துவமான சிறப்புகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் குறித்த 1 பக்க கட்டுரையினை சிறந்த முறையில் அனுப்பும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடமும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல வேண்டுமென்ற நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்டந்தோறும் புத்தகத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் 21.12.2025 முதல் 28.12.2025 வரை 8 நாட்களுக்கு தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
புத்தகத் திருவிழாவில் தொடக்கநாள் முதல் இறுதிநாள் வரை புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சிறப்புரைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. அதன் ஒருபகுதியாக இன்றைய தினம் 4-ஆவது புத்தகத் திருவிழாவிற்கு ’வாசிப்பின் விழா அறிவின் திருவிழா’’ என்ற கருத்துருவினை மையமாகக் கொண்டு, வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினையை (Logo) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள். மேலும், தேனி மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள். வருங்கால தலைமுறையினர் அறிந்து பயன்பெறும் வகையில் தேனி மாவட்டத்தின் வரலாற்று குறிப்புகள், இயற்கை அமைப்புகள், கோயில் ஸ்தலங்கள், சுற்றுலா தளங்கள், கல்வெட்டுகள், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விதமான தனித்துவ சிறப்புகள் குறித்து 250 சொற்களுக்கு மிகாமல் 1 பக்க கட்டுரையினை tnibookfair2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையினை அனுப்பும் நபர்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். மேலும், சிறந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, புத்தகத் திருவிழாவில் கையேடோக வெளியிடப்பட உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேனி மாவட்டத்தின் அரிய தகவல்களை வெளிகொணர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!