by Vignesh Perumal on | 2025-12-12 01:05 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபரைக் 'கள்ளக்காதலன்' என்று அழைக்க மறுத்த 3 வயது மகளைக் கொடூரமாகத் தாக்கி, பிறப்புறுப்பில் சூடு வைத்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள குயவன் மேடு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்யா (27) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (30) என்பவருக்கும் 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தைக்கு 3 வயதாகும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகச் சௌந்தர்யாவை விட்டு வெங்கடேசன் பிரிந்து சென்றுள்ளார்.
வெங்கடேசன், நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற இளைஞரிடம் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனைத் திருப்பிக் கேட்டு ஆனந்தன் அடிக்கடி சௌந்தர்யா வீட்டிற்கு வந்து சென்றதால், நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
கடந்த நவம்பர் 22-ம் தேதி, சௌந்தர்யா தனது தாய் மாரிமுத்து என்பவரிடம் திருச்சி செல்வதாகக் கூறிவிட்டு, கள்ளக்காதலன் ஆனந்தன் உடன் தனது 3 வயது மகளையும் அழைத்துக் கொண்டு காரில் திருச்சிக்குச் சென்றுள்ளார்.
திருச்சி பேருந்து நிலையம் பகுதியில், சௌந்தர்யா தனது 3 வயது மகளிடம், இனிமேல் நீ ஆனந்தனை அப்பாதான் கூப்பிட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்தச் சிறுமி மறுப்பு தெரிவித்ததால், கோபமடைந்த சௌந்தர்யா தனது மகளை அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.
அதன்பின்னர், ஆனந்தன் முன்பதிவு செய்திருந்த லாட்ஜில் மூவரும் தங்கியுள்ளனர். அங்கு, கள்ளக்காதலன் ஆனந்தன் 3 வயது சிறுமியின் உடலில் பல இடங்களில் அடித்து உதைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தாய் சௌந்தர்யா தனது மகளின் பிறப்புறுப்பில் சூடு வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
மறுநாள் அதிகாலை, குழந்தையின் முகத்தில் மாஸ்க் அணிவித்த நிலையில், ஆனந்தன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சௌந்தர்யா தனது மகளை அந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்குச் சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், அங்கன்வாடி பொறுப்பாளர் உணவு வழங்கும்போது முக கவசத்தை அவிழ்த்தபோது, உதடு பகுதியில் காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளார். அப்போது, நடந்த கொடூரச் சம்பவத்தை அந்தச் சிறுமி கூறியுள்ளார்.
இந்தத் தகவல் கிராமத்தில் பரவி, சிறுமியின் பாட்டியான மாரிமுத்து மற்றும் சௌந்தர்யாவின் இளைய சகோதரி ஆகியோர் நேரில் வந்து சௌந்தர்யாவிடம் இது குறித்துக் கேட்டுள்ளனர். அப்போது, சௌந்தர்யா தனது தாயையும் சகோதரியையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறுமியின் தாய் மாரிமுத்து, உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு ஏற்பட்ட கொடூரம் குறித்துப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார், சம்பவம் நடந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உறுதி செய்தனர்.
சௌந்தர்யா மற்றும் ஆனந்தன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்கிருந்து விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!