by Vignesh Perumal on | 2025-12-12 12:54 PM
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 12, 2025) விசாரித்தது. இந்த விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் தரப்பு நோட்டீஸ் கிடைக்காததால் பதில் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் துயரம் தொடர்பாகத் தமிழ் வெற்றி கழகம் தாக்கல் செய்த மனு.
நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமர்வு.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி உள்ளனரா என்று வினவினர்.
அதற்குப் பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படாததால், இந்த விவகாரம் குறித்து எந்தவிதமான பதிலையும் தர முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்னதாக, கரூர் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்துக்குத் தனி நீதிபதி விதித்த தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக ரீதியான முக்கியத்துவம் பெற்றிருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் விசாரணை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படாதது குறித்த விவரங்களைச் சரிபார்த்து, அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!