by Vignesh Perumal on | 2025-12-12 12:42 PM
விருதுநகர் கல்வி மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியத்தைச் சார்ந்த குல்லார் சந்தை ஸ்ரீ வீரப்பா வித்யாசாலா தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள், மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா குழு நடனப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்.
குல்லார் சந்தை ஸ்ரீ வீரப்பா வித்யாசாலா தொடக்கப்பள்ளி நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகள், மாநில அளவிலான கலைத் திருவிழா, பரதம் குழு நடனப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
குல்லார் சந்தை ஸ்ரீ வீரப்பா வித்யாசாலா தொடக்கப்பள்ளியின் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் குழுவாகச் சேர்ந்து பங்கேற்ற பரத நாட்டியப் போட்டியில், மாநில அளவில் மிகச் சிறந்த முறையில் நடனத்தைப் படைத்து மூன்றாம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டும் விதமாக, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் நேரில் சென்று, மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். மாணவர்களின் இந்தச் சாதனைக்குப் பள்ளி நிர்வாகம் வழங்கிய பயிற்சியும் ஊக்கமும் முக்கியக் காரணம் என்று அவர் பாராட்டினார்.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், பள்ளியின் தலைவர், செயலாளர், உப தலைவர், பொருளாளர், தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவிகளைப் பாராட்டினர். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்பைப் பாராட்டி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!