| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் TVK

தவெக-வின் அடுத்த நகர்வு தீவிரம்....! செங்கோட்டையன் தகவல்...!

by Vignesh Perumal on | 2025-12-12 12:28 PM

Share:


தவெக-வின் அடுத்த நகர்வு தீவிரம்....! செங்கோட்டையன் தகவல்...!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டம் வரும் டிசம்பர் 18-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 18, 2025 (புதன்கிழமை) அன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், அதிகாரப்பூர்வமாகத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பெருந்துறைக்கு அருகில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட் பகுதியானது, சேலம் – கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளதால், ஈரோடு மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் திரளான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் வெற்றி கழகம் தொடங்கப்பட்ட பிறகு, தலைவர் விஜய் நேரடியாகப் பங்கேற்கும் முக்கிய பரப்புரைக் கூட்டங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment