| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

மத்திய அமைச்சருடன் மாநில அமைச்சரின் மகன் சந்திப்பு - பின்னணி என்ன?

by satheesh on | 2025-12-11 08:08 AM

Share:


மத்திய அமைச்சருடன் மாநில அமைச்சரின் மகன் சந்திப்பு  - பின்னணி என்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் திமுக எம்.பி.யுமான அருண் நேரு சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:பொதுமக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் இரண்டு முக்கியமான விவகாரங்களை நிதியமைச்சரை நேரில் சந்தித்து முன்வைத்தேன். 1. கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அவசர திருத்தங்கள் - இந்தியா முழுவதும் உள்ள கடன் வாங்கும் பொதுமக்களுக்கு நியாயம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். 2. பிஏசிஎல் லிமிட். மோசடியில் தாங்கள் வியர்வை சிந்தி சேமித்த சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், குறிப்பாக துறையூர் பெண்களுக்கும், விரைவான பணத்தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அமைச்சர் கே.என். நேரு, நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தங்களுக்கு லஞ்சம், வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் என ரூ. 1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி, இதுதொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 252 பக்க அறிக்கையையும் அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார். பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment