by admin on | 2025-12-11 06:06 AM
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரத்தை சேர்ந்த இளைஞர் வேல்குமார் (வயது 27). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் இரவு தனது ஊரில் இருந்து உடன்குடிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் 2 பேர் சென்றுள்ளனர். உடன்குடி தேரியூர் கோவில் அருகே சென்றபோது வேல்குமாரின் பைக்கை மறித்த 2 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் வேல்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அந்த 2 பேரும் பைக்கில் தப்பிச்சென்றனர். அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த வேல்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வேல்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் காதலை கண்டித்ததால் வேல்குமார் வெட்டிக்கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. உடன்குடி தேரியூரை சேர்ந்த செல்வம் (வயது 23) என்ற இளைஞர் திருமணமான பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த காதல் குறித்து அறிந்த வேல்குமார், புனிதராஜை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் புனிதராஜ் தனது அண்ணன் நாகராஜ் உடன் சேர்ந்து வேல்குமாரை வெட்டிக்கொலை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.9842337244.
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!