by admin on | 2025-12-10 09:25 PM
விருதுநகர் கல்வி மாவட்டம்- விருதுநகர் ஒன்றியம் - ஆவுடையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவர் செல்வன் அ.ரோஹன்ராஜ் அவர்கள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில்( களிமண் உருவங்கள் செய்தல்) மாநில அளவில் முதலிடம் எடுத்து எங்கள் பள்ளிக்கும் ,நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளார்.அன்னாரை கௌரவிக்கும் விதமாக நமது விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் ஐயா (தொடக்கக்கல்வி) அவர்கள் தனது சொந்த செலவில் கேடயமும் , மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள் அனைவரும் இணைந்து அந்த மாணவருக்கு புத்தாடையும், இனிப்புகளும் வழங்கி அந்த மாணவரையும்,பள்ளி ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவ்வண்ணமே விருதுநகர் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பிலும் வெற்றி பெற்ற மாணவரையும்,பள்ளி ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவித்தார்கள்.
இது போன்ற நிகழ்வு பள்ளி ஆசிரியர்களாகிய எங்களுக்கும், மாணவருக்கும் அவரின் பெற்றோருக்கும் மிகுந்த உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளது. எங்களையும்,வெற்றி பெற்ற மாணவரையும் பாராட்டிய மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கும் ,மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் விருதுநகர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என அனைவருக்கும் எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை ஆசிரியரின் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337244.
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!