| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

போலி பதிவு எண் கொண்ட வேனில் ரேஷன் அரிசி . கடத்தல்....!!! வேன் கண்ணாடி உடைப்பு...!!!

by admin on | 2025-12-10 09:03 PM

Share:


போலி பதிவு எண் கொண்ட வேனில்  ரேஷன் அரிசி . கடத்தல்....!!!  வேன்  கண்ணாடி உடைப்பு...!!!

சாத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்துவதில் கோஷ்டி மோதல்.போலி பதிவெண் கொண்ட அரிசி கடத்தி வந்த வேன் கண்ணாடியை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் 1 டன் அரிசியை சாலையில் விட்டு சென்றனர்..


 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே  சிவகாசி - சாத்தூர் மெயின் ரோட்டில் சின்னகாமன்பட்டி அருகே  சென்னை பதிவென் கொண்ட கூண்டு வைத்த மினி வேன் சாத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் வேனை வழிமறித்து குறுக்கே காரை நிறுத்தி கம்புகளை வைத்து மினி வேனை தாக்கி முன்பக்க கண்டியை உடைத்துள்ளனர்.பின்னர் வேனின் பின்பகுதி கதவை திறந்து அதில் இருந்த ரேசன் அரிசி மூட்டை சாக்குகளை  சாலையில் இழுத்து போட்டு வேன் டிரைவரை கடத்தி அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலையில் வேன் மற்றும் அரிசி மூட்டைகள் சிதறி கிடப்பதாக சாத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேனை கைப்பற்றி வேனின் பதிவு எண்ணை பரிசோதனை செய்ததில் அது போலி பதிவெண் என தெரியவந்துள்ளது. மேலும் சிவகாசி பகுதியில் இரு கோஷ்டிகள் ரேசன் அரிசி வாங்கி கடத்தி வருவது தெரியவந்துள்ளது.

அவர்களுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டியில்லை இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சாத்தூர் நகர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஏதேனும் பதிவுகள் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றார் மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.


தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment