by Vignesh Perumal on | 2025-12-10 07:18 PM
77வது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் 10, 2025) முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மாணவ/மாணவியரின் நிலைக்காட்சிப் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கூட்டரங்கில் இன்று (10.12.2025) நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்ஜீத் சிங் அவர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மனித உரிமைகள் தின உறுதிமொழியை வழங்கி, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கம், பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தலை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது. வருங்காலச் சமுதாயமாக விளங்கக்கூடிய மாணவ/மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்கள் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் சமத்துவ சமுதாயம்குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகள்பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறைகளைத் தவிர்த்தல்
இளம்வயதில் கர்ப்பம் தரிப்பதால் வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட கருப்பொருள்கள் உள்ளடங்கிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புனித அன்னாள் கல்வியியல் கல்லூரி, ANM நர்சிங் பயிற்சிப் பள்ளி, மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி, NSS கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ/மாணவியர் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டனர்.நிலைக்காட்சிப் போட்டிகளில் சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ/மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்ஜீத் சிங் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். முதல் பரிசு குழந்தை திருமணத்தைத் தடுத்தல் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், இரண்டாம் பரிசு பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை மற்றும் கூட்டுப் பலாத்காரத்தைத் தடுத்தல் புனித அன்னாள் கல்வியியல் கல்லூரி மாணவர்கள், மூன்றாம் பரிசு இளவயது கர்ப்பம் அடைவதால் வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் வீரபாண்டி ANM நர்சிங் பயிற்சிப் பள்ளி மாணவியர் பெற்றனர்.
மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்துக் கல்லூரி மாணவ/மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திரு. முத்துமாதவன் (பொது), திரு. முகமது அலிஜின்னா (கணக்குகள்), மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி. சியாமளா தேவி, வழக்கறிஞர் திருமதி. எம். சசிகலா மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல்லில் சட்டவிரோத விற்பனை...! வாலிபர் கைது..!
செல்வப் பெருந்தகை மட்டும் காங்கிரஸ் கிடையாது ! கொந்தளிக்கும் ஜோதிமணி !!
பண மோசடி - பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட் ! எஸ்பி அதிரடி !!
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!