by Vignesh Perumal on | 2025-12-09 04:28 PM
திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்ன பள்ளப்பட்டி கிராமத்தில், கால்வாய் பகுதியைச் சீரமைத்து, கழிவுநீர் சாலையில் தேங்காமல் பாதுகாப்பு ஏற்படுத்திய ஊராட்சி நிர்வாகத்திற்குத் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் நன்றி தெரிவித்துள்ளதுடன், கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட மணலை உடனடியாக அகற்றக் கோரி மாவட்ட அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
சின்ன பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள கால்வாய்ப் பகுதியில் சில நாட்களுக்கு முன் மணல் அகற்றப்பட்டுச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, கழிவுநீர் சாலையில் தேங்காமல் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பணிக்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஊராட்சி நிர்வாகத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
தற்போது கால்வாயைச் சீரமைத்ததில் அள்ளப்பட்ட மணல் கால்வாயின் அருகிலேயே குவிந்துள்ளதாகவும், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தற்போது கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கியுள்ளதால், கழிவுநீர் தடையின்றி கடந்து செல்வதற்கு முறையான பாதை வசதி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம், மாவட்ட நிர்வாகத்திடம் பின்வரும் அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது. AD (உதவி இயக்குநர்), BDO (வட்டார வளர்ச்சி அலுவலர்), ABDO (உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்), சுகாதார ஆய்வாளர் (Health Inspector) ஆகியோர் நேரடியாகப் பார்வையிட்டு, நிலையை ஆய்வு செய்து, கிராம மக்களுக்கு உதவ வேண்டும் என்றும், சுகாதாரச் சீர்கேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!