by Vignesh Perumal on | 2025-12-09 03:29 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதுச்சேரி மாநில முதல் பரப்புரைக் கூட்டம் இன்று (டிசம்பர் 9, 2025) காலை 10:30 மணி அளவில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் உப்பளம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றதாலும், துப்பாக்கியுடன் ஒருவர் சிக்கியதாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் பரப்புரைக் கூட்டம் நடைபெறும் மைதானத்தின் முகப்பு வாயிலில், புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்டவர்களை மட்டும் முறையான QR கோட் அட்டையைச் சரிபார்த்து காவல்துறையினர் உள்ளே அனுமதித்து வந்தனர்.
ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, மைதானத்தின் நுழைவு வாயில் கேட்டைத் தொண்டர்கள் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயற்சித்தனர்.
பொதுக்கூட்டத்திற்குச் செல்ல QR கோடு அனுமதி அட்டை இல்லாத ஏராளமான தவெக தொண்டர்கள், கூட்டத்தில் பங்கேற்கும் ஆர்வ மிகுதியால் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டனர்.
அவர்கள் தடுப்புகளைத் தாண்டி, எகிறிக் குதித்து உள்ளே செல்ல முயன்றனர். சிலர் மரங்கள் மற்றும் சுவர்களில் ஏறி மைதானத்திற்குள் செல்ல முயற்சித்தனர். அத்துமீற முயன்ற தவெக தொண்டர்களைப் புதுச்சேரி காவல்துறையினர் விரட்டிப் பிடிக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கூட்டத்தை உப்பளம் மைதானம் முழுவதும் ட்ரோன் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை அறிந்த சில தொண்டர்கள், காவல்துறையினரின் கண்களில் இருந்து தப்பிப்பதற்காகக் கட்சித் துண்டால் முகத்தை மறைத்துக்கொண்டு, புதருக்குள் பதுங்கவும் முயற்சித்தனர். இதுவும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், கூட்டம் நடைபெறும் உப்பளம் மைதானத்திற்குள் நுழைபவர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்தபோது, துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கினார். துப்பாக்கியுடன் வந்த நபரால் கூட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அவர் யார், எதற்காகத் துப்பாக்கியுடன் வந்தார் என்பது குறித்துப் புதுச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்தக் கூட்ட அரங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!