by Vignesh Perumal on | 2025-12-09 03:14 PM
கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள 'ஊர்க்காவல் கண்காணிப்புத் திட்டத்தின்' கீழ், கன்னியாகுமரியில் உள்ள முக்கியச் சுற்றுலாத்தலத்தை முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரும் விதமாக, ஒரே நாளில் 85 புதிய சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், இ.கா.ப. அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னெடுப்பான ஊர்க்காவல் கண்காணிப்புத் திட்டம் (ஒரு காவலர் – இரண்டு சிசிடிவி), பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது.
இந்தத் திட்டமானது காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தை முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரும் வண்ணம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் குறிக்கோளான "அனைத்துக் கிராமங்களிலும் சிசிடிவி" என்ற இலக்கை எட்டுவதற்கும் வழிவகை செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத்தலப் பகுதியை முழுமையான பாதுகாப்புக் கண்காணிப்பிற்குள் கொண்டு வரும் நோக்கில், புதிதாக 85 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 85 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கேமராக்களைப் புதிதாக அமைக்கப்பட்ட நவீன புறக்காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் (இணையவழி குற்றப்பிரிவு), கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜ் பெருமாள் மற்றும் காவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டம் மூலம் கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்தில் குற்றச் சம்பவங்கள் மேலும் குறைய வாய்ப்புள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பான உணர்வு மேலோங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!