| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனியில் நான்காவது புத்தகத் திருவிழா கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம்...!!!

by admin on | 2025-12-09 02:20 PM

Share:


தேனியில் நான்காவது புத்தகத் திருவிழா கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம்...!!!

தேனி மாவட்டம் 4-ஆவது புத்தகத் திருவிழா  2025   நடத்துவது தொடர்பாக   மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் நடைபெற்றது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 4-ஆவது புத்தகத் திருவிழா 2025 கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட  துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.12.2025) நடைபெற்றது இக்கூட்டத்தில்,  தேனி மாவட்டத்தில் நான்காவது  புத்தகத் திருவிழா தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகின்ற  21.12.2025 முதல் 28.12.2025 வரை 8  நாட்கள் சிறப்பாக  நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்துப் பணிகளையும் சம்மந்தப்பட்ட  துறை  அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.    அதன்படி, விழா மேடை அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், அரங்குகள் அமைத்தல், சிறப்பு பேச்சாளர்களை அழைத்தல், நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், போதிய அளவிலான      காவலர்களை நியமித்து,  போக்குவரத்தை சீர்செய்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பொதுமக்கள் மற்றும் அரங்குகள் பாதுகாப்பிற்கு தீயணைப்பு வாகனத்தைத் தயார் நிலையில் வைத்திருத்தல், தினசரி மருத்துவ முகாம் நடத்துதல், விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும்,  அதன் பயன்பாடுகள் குறித்தும்             பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும்  விதமாக விளக்கக்                  கண்காட்சி அமைத்தல்  உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு புத்தகத்  திருவிழாவை   மிகச்சிறப்பாக   நடத்திட   அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என                  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை  வழங்கினார்.மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் மற்றும் மாணவ/மாணவியர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகளை  மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல  வேண்டுமென்ற நோக்கில்  நடைபெற உள்ள  4-ஆவது புத்தகத்  திருவிழாவிற்கு பொதுமக்கள், மாணவ/மாணவியர்கள் அனைவரும் தவறாது  வருகை தந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார்,   திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) திருமதி செ.அபிதா ஹனிப்,  பெரியகுளம் சார் ஆட்சியர்     திரு.ரஜத்  பீடன், இ.ஆ.ப.,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்து மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


தி. முத்துக்காமட்சி எவிடன்ஸ் எடிட்டர்.9842337244.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment