by Vignesh Perumal on | 2025-12-08 04:03 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியின் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவியர்களுக்கு, மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கும் திட்டம் இன்று (டிசம்பர் 8, 2025) அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த முக்கியத் திட்டத்தை, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. சக்கரபாணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவியர்கள் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவியர்களின் கல்விச் செலவைக் குறைக்கவும், ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்யவும், அவர்களுக்குக் கூடுதல் நிதிச்சுமை இன்றிச் சிறப்பான கல்வி கிடைக்க வழிவகை செய்யவும், கோவில் நிர்வாகம் சார்பில் இந்தக் 'கட்டணமில்லா உணவு வழங்கும் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மாணவியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!