| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

அபகரிப்பு வழக்கு...! மு.க. அழகிரி மனு தள்ளுபடி...! உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு...!

by Vignesh Perumal on | 2025-12-08 02:47 PM

Share:


அபகரிப்பு வழக்கு...! மு.க. அழகிரி மனு தள்ளுபடி...! உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு...!

மதுரை சிவரக்கோட்டையில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, மு.க. அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 8, 2025) தள்ளுபடி செய்தது.

மதுரை சிவரக்கோட்டைப் பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான 4 சென்ட் நிலத்தை அபகரித்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மு.க. அழகிரி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் மு.க. அழகிரியின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மு.க. அழகிரி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில், நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சரியான கருத்தையே தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மேலும், விசாரணைக் கோர்ட்டில் உள்ள வழக்கை நீங்கள் (மு.க. அழகிரி) ஏன் எதிர்கொள்ளக் கூடாது?" எனவும் நீதிபதிகள் அழகிரி தரப்புக்குக் கேள்வி எழுப்பினர். அதனைத்தொடர்ந்து இவ்வாறு கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம், மதுரை சிவரக்கோட்டை கோயில் நில அபகரிப்பு வழக்கை மு.க. அழகிரி உள்ளிட்டோர் கீழமை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.










ஆசிரியர்கள் குழு...... 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment