| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!

by admin on | 2025-12-07 06:26 PM

Share:


முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!

தேனி மாவட்டமமுப்படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு முன்னாள் படைவீரர்களின்                                                                        18 வாரிசுதாரர்களுக்கு  ரூ.2.18 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளைமாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முப்படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு இன்று (07.12.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல  நிதியிலிருந்து  போர் மற்றும்     போரை ஒத்த நடவடிக்கையில் ஊனமுற்ற முன்னாள் படைவீரரது மகள் திருமணத்திற்காக 22 காரட் தங்க நாணயமும்,  முன்னாள் படைவீரரின்     18 வாரிசுதாரர்களுக்கு  ரூ.2.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், இராணுவப்பணியின்  போது போரில் இறந்த/ஊனமுற்ற/முன்னாள் படைவீரர் சார்ந்த             12 நபர்களுக்கு பரிசுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங்,   இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,இராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.


   தேனி மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் இராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்களது நலனைப் பேணுவதில் நமது மாவட்டம் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது.  முன்னாள் படைவீரர்கள் மற்றும் பணியில் உள்ள படைவீரர்களின் சிறார்களின் நலனுக்காக அரசின் சார்பில் நலத்திட்டங்கள் மற்றும்  கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் படைவீரர் மற்றும் படைவீரரை சார்ந்தோர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக  குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  முன்னாள் படைவீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஓய்வு பெற்ற படைவீரர்கள், போட்டி தேர்வுகளில் பங்கு கொண்டு பயன் பெற வேண்டும்.  ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் நோக்கில், தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்காக "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ.1 கோடி வரை தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.  மேலும், பெறப்படும் கடன்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியமும்,  3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இதுபோன்று அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை முன்னாள் படைவீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 


மேலும், தேனி மாவட்ட  அரசுத்துறை அலுவலர்களும்,  பொதுமக்களும் கடந்த ஆண்டு கொடிநாள் வசூலுக்கு ஒத்துழைப்பு நல்கியதைப்போல் இந்த ஆண்டும் இலக்கீட்டிற்கு மேல் வசூல் செய்திட ஒத்துழைப்பினை  வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து,   போர் மற்றும் போரை ஒத்த நடவடிக்கையில் ஊனமுற்ற முன்னாள் படைவீரரது மகள் திருமணத்திற்காக 22 காரட் தங்க நாணயமும்,  கல்வி உதவித்தொகையாக  6 நபர்களுக்கு ரூ.1,75,000/-,  மாதந்திர நிதியுதவியாக 1 நபருக்கு ரூ.8,000/- கண்கண்ணாடி மானியமாக 5 நபர்களுக்கு ரூ.19,200/-, வீட்டுவரிச் சலுகை மீளப்பெறுதல் தொகையாக 2 நபர்களுக்கு ரூ.16,473/-, என மொத்தம் 18 நபர்களுக்கு 2,18,673/-, மதிப்பிலான நலத்நலத்திட்ட உதவிகளையும், இராணுவப்பணியின்  போது போரில் இறந்த/ஊனமுற்ற/முன்னாள் படைவீரர்/ சார்ந்த 12 நபர்களுக்கு பரிசுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில்  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார்,  உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) கர்னல் ரவிக்குமார், ஓய்வுபெற்ற விங் கமாண்டர்கள்  கணேசன், கிருஷ்ணசாமி, மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..


தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.9842337244.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment