by admin on | 2025-12-07 09:08 AM
திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில்கைப்பந்து போட்டி
அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான இரண்டு நாள் கைப்பந்து போட்டி (4. 12 25 -5 12 25)திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஈத்தன் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வு திரவியம் கல்வி நிறுவனங்களின் தாளாளர்,மருத்துவர் T.பாண்டியராஜ் M.B.B.S., D.M.R.Dமற்றும் செயலாளர், மருத்துவர் ஹேமலதா பாண்டியராஜ் M.B.B.S ஆகியோர் தலைமை வகிக்க, திரவியம் கல்வி நிறுவனங்களின் இயக்குநர், மருத்துவர் P. இமானுவேல் ஜீடா M.B.B.S., M.D.R.D அவர்கள் முன்னிலை வகித்தார்.திரவியம் கல்வி நிறுவனங்களின் தாளாளர், மருத்துவர் T.பாண்டியராஜ் M.B.B.S ., D.M.R.D., அவர்கள் விளையாட்டு துறையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் போது தமிழகதுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறையில் கொண்டுள்ள ஈடுபாடு, செயல்பாடு குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் விளையாட்டு துறையில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.மேலும் மாணவிகள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி தலைமையுரை ஆற்றினார். திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் C திருமுருகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் ,திரவியம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் முனைவர் C. கார்த்திகேயன் அவர்கள் வாழ்த்துரை வழங்க, திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளர்B. அன்னபூரணி அவர்கள் அறிமுகவுரை வழங்கினார். இதில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் A. ராஜம் அவர்கள் உடற்கல்வி குறித்து மாணவிகளுக்கு சிறப்பான உரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக நாயகம் நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் M.S. செல்லத்துரை அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு உடற்பயிற்சி உடலுக்கான பயிற்சி மட்டுமல்ல நம் மன வலிமையை கூட்டுவதற்கான பயிற்சி என்பதையும். மாணவிகளுக்கு உடற் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் ஆறு கல்லூரிகள் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டன. இதில் பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, திண்டுக்கல். முதல் இடத்தையும், திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,கைலாசபட்டி, பெரியகுளம் இரண்டாம் இடத்தையும்,நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தேனி. மூன்றாம் இடத்தையும், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி பழனி. நான்காம் இடத்தையும் பெற்றன. மேலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திரவியம் கல்வி நிறுவனங்களின் தாளாளர், மருத்துவர் T பாண்டியராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர் M.S செல்லத்துரை உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் பதக்கங்களையும், கேடயங்களையும் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் மாணவிகள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர். திரவியம் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் திருமுருகன், ஆங்கிலத் துறை உதவி ப் பேராசிரியர் K. அழகன் மற்றும் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் M., காஞ்சி லட்சுமி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்திகழ்வு நடைபெற்றது.நிறைவாக விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் காஞ்சி லட்சுமி அவர்கள் நன்றியுரை வழங்க இவ்விழா இனிதே நிறைவுற்றது.
செய்தியாளர் ரவிக்குமார் தேனி.
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!
திமுக நகராட்சி தலைவரின் குடோனில் அமலாக்கத்துறை சோதனை....!!!
தீப்பிடித்த காரில் உயிருடன் எரிந்து...! ஆய்வாளர் சலீமத் உயிரிழப்பு..! பெரும் பரபரப்பு...!