| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!

by admin on | 2025-12-06 11:51 PM

Share:


நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!

தேனி மாவட்டம்  நலம் காக்கும் ஸ்டாலின்    திட்டத்தின்கீழ்,  வடபுதுப்பட்டி இந்து முத்தாலம்மன்  மேல்நிலைப்பள்ளியில்    நடைப்பெற்ற  சிறப்பு   மருத்துவ  முகாமினை     மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். 


தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரம், வடபுதுப்பட்டி இந்து முத்தாலம்மன்    மேல்நிலைப்பள்ளியில்    நடைப்பெற்ற  நலம் காக்கும் ஸ்டாலின்  சிறப்பு  மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,  உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு  உயர் சிறப்பு மருத்துவ முகாமினை 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள்.  அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ  முகாம்  வட்டாரத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 24 மருத்துவ  முகாம்  ஒவ்வொரு  சனிக்கிழமையும் நடத்த  திட்டமிடப்பட்டு, இதுவரை   17  மருத்துவ   முகாம்கள்  நடத்தப்பட்டுள்ளது


இம்முகாமில் இரத்தப்பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, பொது மருத்துவம்,  பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி) ஆகிய 17 துறைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் இன்றையதினம், வடபுதுப்பட்டி இந்து முத்தாலம்மன் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்ற 18-ஆவது சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு,  கர்ப்பிணி  தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், சித்தா பெட்டகங்கள், தொழிலாளர் நல வாரிய அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும்   மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், அடையாள அட்டைகள் உள்ளிட்ட  நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். இம்முகாமில் இணை இயக்குநர்  (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஜவஹர்லால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி,     வட்டாட்சியர் திரு.மருதுபாண்டி   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


T. Muthu Kamakshi evidence editor.  9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment