| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!

by admin on | 2025-12-06 11:27 PM

Share:


கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!

1. கிலோ 60 கிராம்  கஞ்சா   பறிமுதல்.... ஒருவர் கைது.... சிறை

கன்னியாகுமரி  மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இருளப்பபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரது மகன் உதயராஜ் (26) என்பவரை சோதனை செய்ததில் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ 60 கிராம்  அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வருடத்தில் இதுவரைக்கும் 261 வழக்குகள் பதியப்பட்டு 465 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment