by admin on | 2025-12-01 09:33 AM
எடப்பாடி பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி அதிமுக தொண்டர் பலி*
ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கொண்டயைம்பாளையம் பகுதியை சேர்ந்த 43 வயதான அர்ஜூனன், பிரசார கூட்டத்துக்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்
உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்தவர்கள் கூறினார்
அதிகார மையங்கள்-இபிஎஸ்.
தமிழகத்தில் ஸ்டாலின், துர்கா, உதயநிதி, சபரீசன் என நான்கு அதிகார மையங்கள் உள்ளன.
செங்கோட்டையனுக்கு அடையாளம் கொடுத்தது அ.தி.மு.க., ஓட்டு வாங்குவதற்காக உங்களை சந்தித்த செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முன் உங்களிடம் கேட்டாரா?
கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் எனக்கூறி அ.தி.மு.க தலைமைக்கு கெடு விதித்தவர் செங்கோட்டையன்.
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தேவர் குருபூஜையின்போது செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டார்.
அ.தி.மு.க-வில் இருந்துகொண்டே கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டு துரோகம் செய்தார்.
கட்சித் தலைமைக்கே கெடுவிதித்தவரை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும்?வேறு கட்சியில் இணைந்தபின் சும்மா இருக்காமல் தூய்மையான ஆட்சி அமைப்போம் என செங்கோட்டையன் கூறுகிறார்.ஜெயலலிதா மற்றும் எனது அமைச்சரவையில் இருந்த போது அதிமுக தூய்மையான ஆட்சி கொடுக்கவில்லையாமாற்றுக்கட்சியில் இணைந்த செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க.வரும் 2026ல் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்த உடன் கோபியில் தான் வெற்றி விழா கொண்டாட்டம் நடக்கும்.அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்-கோபிசெட்டிபாளையம் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.