| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

250 போலீசார் மீது நடவடிக்கை....!!! ஏன் தெரியுமா...!!!

by admin on | 2025-11-29 09:47 AM

Share:


250 போலீசார் மீது நடவடிக்கை....!!! ஏன் தெரியுமா...!!!

*அரசு வீட்டை "வியாபாரமாக்கி" "உரிமையை விற்ற" காவலர்கள்...!*

அரசு வீட்டு' முறைகேடு: காவல்துறைக்குப் பின் மற்ற துறைகளிலும் அதிர்ச்சி! – அதிரடி ஆய்வுக்குப் பொதுமக்கள் கோரிக்கை*

காவல்துறையில் வீட்டு வசதிக்காக ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்புகளை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு முறைகேடுகளில் ஈடுபட்ட விவகாரம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி ஆய்வில் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி, இந்த முறைகேடு மற்ற அரசுத் துறைகளின் குடியிருப்புகளிலும் பரவியிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவலர் குடியிருப்பு முறைகேடு: வாடகைக்கு விட்ட 250 பேர் மீது பாய்கிறது நடவடிக்கை!*தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் மூலம் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளைச் சிலர் முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு, காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பித்து பல ஆண்டுகளாகியும் வீடு கிடைக்காமல் 5000-க்கும் மேற்பட்ட சீனியர் போலீசார் காத்துக்கிடக்கும் நிலையில், ஒதுக்கீடு பெற்ற சிலர் குடியிருப்புகளைப் பணம் ஈட்டும் வழியாகப் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.

 ₹5 லட்சம் குத்தகை ஒப்பந்தங்கள்!*

ஆய்வின்போது, சில போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளைப் பிறருக்கு ரூ.5 லட்சம் வரை குத்தகைக்கு (Lease) விட்டதற்கான மறைமுகப் பணப் பரிவர்த்தனைகள் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சொந்த வீடு கட்டிய பின்னரும் காவலர் குடியிருப்பைத் தொடர்ந்து தக்கவைத்து, மற்ற போலீசாருக்கு 'மேல் வாடகைக்கு' விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*சென்னையில் 250 பேருக்கு 'மெமோ' – குடியிருப்பு ரத்து?*

முதற்கட்டமாக, தலைநகர் சென்னையில் மட்டும் வீட்டை வாடகைக்கு விட்ட சுமார் 250 காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு விளக்கமளிக்கும்படி 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது. போதிய விளக்கமளிக்காத பட்சத்தில், அவர்களது வீட்டு ஒதுக்கீடு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் உள்ள தகுதியான மூத்த காவலர்களுக்கு அந்த வீடுகள் உடனடியாக வழங்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பில் அலட்சியம்:*

'லைன் ஆர்டலிகள்' மீது துறை ரீதியான விசாரணைஇந்த முறைகேடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டிய 'லைன் ஆர்டலி'கள் மீதும் புகார் எழுந்துள்ளது. முறைகேடுகளைக் கண்டறியத் தவறிய அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி ஆய்வின் மூலம், உண்மையாகவே வீடுகள் தேவைப்படும் ஆயிரக்கணக்கான போலீசார் விரைவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற துறைகளிலும் ஆய்வு தேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்!*காவலர் குடியிருப்புகளில் நடந்துள்ள இந்த முறைகேடுகள் வெளிவந்ததை அடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொதுப்பணித்துறை (PWD) அல்லது பிற வீட்டு வசதி வாரியங்கள் மூலம் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளிலும் இதேபோன்ற முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

வாடகைக்கு விடப்பட்ட அரசு வீடுகள்:அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளைத் தனியார் நபர்களுக்கோ, அல்லது ஒதுக்கீடு பெறாத அரசுப் பணியாளர்களுக்கோ வாடகைக்கு விட்டிருப்பதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சொந்த வீட்டில் வசித்தும் அரசு வீட்டைத் தக்கவைத்தல்: காவலர் குடியிருப்பு விவகாரத்தைப் போலவே, மற்ற துறையினரும் சொந்த வீடு கட்டிய பின்னரும், வீட்டைப் பணம் ஈட்டும் நோக்கத்துடன் தக்கவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.உடனடியாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுத் துறை குடியிருப்புகளிலும் உயர் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்த வேண்டும். அரசுக்குச் சொந்தமான வீடுகளில் அத்துமீறி வாடகைக்கு உள்ளேறிய தனியார் நபர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமின்றித் துறை ரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் மற்ற துறைகளிலும் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில், அரசு வீடுகள் உண்மையிலேயே தேவைப்படுவோருக்குக் கிடைக்க ஒரு புதிய வெளிப்படைத்தன்மை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*தினக்கதிர் பிரபு*


T. MuthuKamakshi evidence editor.9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment