| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

காமராஜர் பற்றிய அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்...!!!

by admin on | 2025-11-27 06:52 PM

Share:


காமராஜர் பற்றிய அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்...!!!

கர்மவீரர் கு காமராஜ் அவர்களை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் மனு 

காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் கு. காமராஜர் மீது அவதூறு பரப்புவதாக  திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏ. எம் செளத்ரி மீது புகார் மனு அளித்தனர்  நிகழ்வில் மாநில தலைவர் எஸ். வி. பூமிநாதன், தென்காசி மாவட்ட செயலாளர் எ. கோவிந்சாமி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஜெயந்திரன், நாடாளும் மக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். நாகேந்திரகுமார், சட்ட ஆலோசகர் ஜீ. பி. கணேச பாண்டியன் உடன் இருந்தனர் இது குறித்து மாநில தலைவர் எஸ்.வி பூமிநாதன் பேசியதாவது

பாரதத்தின் ஒரு ஒப்பற்ற தலைவரான முன்னாள் முதலமைச்சர், ,கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜரை பற்றி தொடர்ந்து மேற்கண்ட எதிர்மனுதாரரான ஏ. எம்.சௌத்ரி தேவர் அவதூறுகளை பரப்பிய வண்ணமும் திட்டமிட்டு அவர் புகழுக்கு தீய எண்ணத்தோடு ஒரு மிகப்பெரிய சதித்திட்ட கும்பலுடன் சேர்ந்து கூட்டு சதி செய்து ஒரு வஞ்சக சூழ்ச்சி செய்து, பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு அவமரியாதை செய்ய வேண்டும் எனவும் அதன் மூலம் நாடார் சமுதாயத்திற்கு பிற சமுதாயத்தினர் மத்தியில் ஒரு இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடும்,மேலும் வருகின்ற இந்த சட்டமன்றதேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற தீய சிந்தனையோடும், சமூக விரோதிகளிடம் கூட்டு சேர்ந்தும், நாடார் சமுதாயத்திற்க்கு எதிரான அரசியல்வாதிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டும், சட்டமுரணாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சௌத்ரி தேவர் என்பவர்  சமூக வலைதளத்தில் உள்ள youtube சேனலுக்கு பேட்டி கொடுத்தார் அந்த பேட்டியில் "ஓட்டுக்கு பணம் கொடுத்ததை தொடங்கி வைத்ததே காமராஜர் தான் எனவும், இதை தேவர் பேசியிருக்கிறார் எனவும் உயிருடன் இல்லாத தலைவர்களை கூறி, மேலும் கள்ள நோட்டு காமராஜர் ஆட்சி காலத்தில் தான் வந்தது எனவும், அதையும் தேவர் கூறியிருப்பதாகவும் அவதூறான உண்மைக்கு புறம்பான காமராஜரின் நற்பெயரை கெடுக்கும் எண்ணத்தில் காமராஜரின் நேர்மையை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரை அவதூறு படுத்தி சிறுமைப்படுத்த வேண்டும் என்றும், அவரது நற்குணத்தை சேதப்படுத்த வேண்டும் என்றும், பொய்யான கருத்துகளுடன் ஒருவரின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் பொருட்டு பொய்யான செய்திகளை பரப்புவதை செய்தாலும்" மேலும் பரப்புரை செய்தாலோ மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்பதை தெரிந்து கொண்டு ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பேசியிருக்கும் ஏ. எம் சௌத்ரி தேவரால் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி கலவரம் ஏற்படும் ஆபாயகரமான சூழ்நிலை உள்ளது. மேலும் மக்கள் விரும்பும் பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கும், நேர்மைக்கும் அவரது நற்குணத்தை சேதப்படுத்தும் விதமாக சமூக விரோத கும்பல்களுடன் கூட்டு சேர்ந்து  சதிசெய்து வஞ்சக திட்டத்துடன் பொய்யான அவதூறுகளை பரப்பி வரும் சௌத்ரி தேவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படியும், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் தேசிய பாதுகாப்பு சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.என கூறினார்


T. Muthu kamachi evidence editor 9842337244.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment