| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

கொள்கைப் பற்றோடு..! உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்..! முதல்வர்...!

by Vignesh Perumal on | 2025-11-27 12:07 PM

Share:


கொள்கைப் பற்றோடு..! உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்..! முதல்வர்...!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 27, 2025) தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவரது தந்தையும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவருக்கு நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: "கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் தம்பி உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நீ, என்றும் மக்களுக்கு 'காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்!"

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு முதலமைச்சரின் இந்த வாழ்த்து, அவரது அரசியல் மற்றும் பொது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.








நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment