| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு....!!!?

by admin on | 2025-11-26 07:04 PM

Share:


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு....!!!?

தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்.

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் இணைந்து இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை "இறையாண்மையும் சமநலசமுதாயமும் சமயச்சார்பின்மையு ம் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும்".அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய,பொருளியல், அரசியல் நீதி, எண்ணம்,அதன் வெளியீடு,கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை,சமுதாயப் படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மைஆகியவற்றை எய்திடச் செய்யவும்,அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை,ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்பு உரிமையினை  வளர்க்கவும்உள்ளார்ந்த உறுதியடையராய்,நம்முடைய அரசமைப்பு பேரவையில், 1949 நவம்பர் 26 ஆம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.என்று இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.மேலும் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


T. Muthu kamachi evidence editor. 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment