by Vignesh Perumal on | 2025-11-26 03:29 PM
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் சட்டவிரோதமாகச் சூதாட்ட கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை மாவட்டக் காவல்துறையின் தனிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.48 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வத்தலக்குண்டு பகுதியில் உள்ள ஒரு சூதாட்ட கிளப்பில் சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பிரதீப் அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
எஸ்.பி.யின் உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்.பி.யின் தனிப்படையினர் வத்தலக்குண்டு பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வத்தலக்குண்டு பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு சூதாட்ட கிளப்பில் சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலைக் காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
வத்தலக்குண்டுவைச் சேர்ந்த மதன்குமார், பிரகாஷ் உட்பட மொத்தம் 7 பேரைத் தனிப்படையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.48 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 5 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் தனிப்படையினர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து, சூதாட்டக் கிளப்பின் உரிமையாளர் யார், இந்தக் கும்பல் நீண்ட நாட்களாகச் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!