by Vignesh Perumal on | 2025-11-25 11:21 AM
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் மழை மற்றும் அடர் பனிமூட்டம் நிலவியபோது, வீட்டிலிருந்து வெளியே வந்த மூதாட்டி ஒருவரை காட்டுமாடு தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். கொடைக்கானலில் தொடர்ந்து காட்டுமாடுகளால் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொடைக்கானல், குருசாமிபள்ளம் பகுதியைச் சேர்ந்த பாப்பா (70) என்ற மூதாட்டி.
மூதாட்டி பாப்பா தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அப்பகுதியில் பலத்த மழையும், அடர் பனிமூட்டமும் நிலவியதால் எதிரே வருபவர்கள் யார் என்று தெரியாத நிலை இருந்தது.
அப்போது, அங்குள்ள ஒரு புதரில் மறைந்திருந்த காட்டுமாடு எதிர்பாராதவிதமாக அவரைத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் மூதாட்டி பாப்பா படுகாயமடைந்தார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவிச் சிகிச்சை அளித்தனர்.
மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சேர்க்கப்பட்டார்.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக, குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், அவை பொதுமக்களைத் தாக்குவதும், அச்சுறுத்துவதும் கவலை அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, காட்டுமாடுகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவை குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதைத் தடுக்கவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!