by Vignesh Perumal on | 2025-11-24 04:47 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் கன மழை பெய்து வருவதால், வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்படி, காவல்துறை மீட்புக் குழுக்கள் முழுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயலால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை உடனடியாகக் காப்பாற்றுவதற்காக, மாநிலப் பேரிடர் மீட்புப் படையில் வெள்ள மீட்புப் பயிற்சி பெற்ற மாவட்டக் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுக்கள் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த மீட்புக் குழுவினரின் தயார் நிலையையும், அவர்களிடம் உள்ள வெள்ள மீட்பு உபகரணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் அவர்கள் இன்று (நவம்பர் 24, 2025) மாவட்ட ஆயுதப்படையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பிறகு, மீட்புக் குழுவினரிடையே பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்புக் குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம், உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பதில் முக்கியத்துவம் கொடுத்துச் செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வெள்ளம் அல்லது பேரிடர் தொடர்பான அவசர உதவி தேவைப்படும்போது, பொதுமக்கள் தயக்கமின்றி உடனடியாகத் தொடர்புகொள்ளும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக கட்டுப்பாட்டு அறை எண்:100
அவசர உதவி எண்: 7010363173 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!