| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

லஞ்சம் வாங்கியதாக வைரல் வீடியோ...! மின் பகிர்மான செயற்பொறியாளர் பத்மா பணியிடை நீக்கம்..!

by Vignesh Perumal on | 2025-11-22 05:56 PM

Share:


லஞ்சம் வாங்கியதாக வைரல் வீடியோ...! மின் பகிர்மான செயற்பொறியாளர் பத்மா பணியிடை நீக்கம்..!

சிவகாசி மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்த பத்மா என்பவர், கையில் கட்டுக்கட்டாகப் பணத்தை எண்ணும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி மின் பகிர்மான செயற்பொறியாளர் பத்மா. புதிய மின்சார இணைப்பு வழங்குதல், மின்வாரிய திட்ட அனுமதிகள், மீட்டர் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அதிகாரி பத்மா லஞ்சம் பெற்றதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் புகார்கள் அளித்து வந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், அவர் தனது அலுவலக அறையில் இருக்கையில் அமர்ந்து, கட்டுக்கட்டாகப் பணத்தை எண்ணி, கல்லா கட்டுவது போல் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வைரல் காட்சி, பொதுமக்கள் மத்தியில் மின்வாரியத்தின் மீது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் தூண்டியது.

வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, மின்வாரியத்தின் உயர்மட்ட அளவில் இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த மின்வாரியத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் பத்மாவிடம் இருந்து உடனடியாக விளக்கம் கோரினார்.

குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும், மின்வாரிய அமைப்பின் நற்பெயரைக் காக்க வேண்டியதன் அவசியத்தையும் கருத்தில் கொண்டு, செயற்பொறியாளர் பத்மாவைத் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்து மின்வாரியத் தலைவர் அதிரடியாக உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கத்தைத் தொடர்ந்து, நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க, இதற்கு முன் சிவகாசி மின் பகிர்மான செயற்பொறியாளர் பொறுப்பில் இருந்த பாபநாசம் என்பவர், மீண்டும் அந்தப் பதவிக்குத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்களின் குறைகள் மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகள் விரைவாகத் தீர்க்கப்படும் வகையில் புதிய அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment