| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

3 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட்...! எஸ்.பி. அதிரடி நடவடிக்கை...!

by Vignesh Perumal on | 2025-11-20 11:25 AM

Share:


3 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட்...! எஸ்.பி. அதிரடி நடவடிக்கை...!

விருதுநகர் மாவட்டத்தில், பெண்கள் தொடர்புடைய தனிப்பட்ட ஒழுங்கு மீறல்கள் மற்றும் கள்ளக்காதல் விவகாரங்களில் ஈடுபட்டதாகக் கிடைத்த புகார்களின் அடிப்படையில், ஒரு பெண் போலீஸ் உட்பட மூன்று காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) கண்ணன் அவர்கள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.

புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் உல்லாசம் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தவர் ஜெயபாண்டி.

காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்க வந்த ஒரு இளம்பெண்ணுடன் காவலர் ஜெயபாண்டி நெருங்கிப் பழகியுள்ளார். நாளடைவில், இது கள்ளக்காதலாக மாறிய நிலையில், அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று ஜெயபாண்டி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதை அந்தப் பெண்ணின் கணவர் உட்பட உறவினர்கள் நேரில் சென்று கையும் களவுமாகப் பிடித்தனர்.

அப்போது காவலர் ஜெயபாண்டி அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடி விட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல, விருதுநகர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் டிரைவராகப் பணிபுரிந்த ஒரு போலீசுக்கும், ஒரு பெண் போலீசுக்கும் இடையே நெருங்கிய கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்த உறவில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, போலீஸ் டிரைவர் சம்பந்தப்பட்ட பெண் போலீசிடம் பேசுவதைத் தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் போலீஸ், டி.எஸ்.பி. அலுவலகத்திற்கே சென்று, அங்கேயே போலீஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த அநாகரிகச் செயலால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் மத்தியிலும் காவல்துறையின் மாண்பு குறைந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினரின் இந்த அநாகரிகச் செயல்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. கண்ணன் அவர்களுக்குத் தகவல் தெரிய வந்தது. அவர் உடனடியாக இரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டார்.


விசாரணையின் அடிப்படையில், எஸ்.பி. கண்ணன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய ஏட்டு ஜெயபாண்டி, டி.எஸ்.பி. அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட போலீஸ் டிரைவர் மற்றும் சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

காவல்துறையின் ஒழுங்கைக் காக்கும் விதமாக, எஸ்.பி. எடுத்த இந்த விரைவான நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment