by admin on | 2025-11-19 06:21 PM
ரூ.20 ஆயிரம் லஞ்சம் இளநிலை பொறியாளர் கைது.
தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. எந்த ஒரு வேலையாக சென்றாலும் அன்பளிப்பு கொடுத்தால் மட்டுமே பணிகள் நிறைவேறுகிறது, இது குறித்த அனைத்து தகவலும் உளவுத்துறை மூலம் காசுக்கு தெரிந்திருந்தும் அதை முழுமையாக கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. காரணம் பொதுமக்கள் தங்கள் வேலை விரைவாக முடிய வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் பணம் வாங்கிக் கொள்ளுங்கள் விரைவில் வேலையை செய்து கொடுங்கள் என்று பொதுமக்கள் கூறுகின்ற இந்த தைரியம்தான் அரசு ஊழியர்களை லஞ்சம் வாங்க தூண்டுகிறது. இதனால் பயமற்ற அரசு ஊழியர்கள் துணிந்து அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதில் கொழுத்துள்ளனர் - இந்நிலையில் இன்று தேனி மாவட்டம் தேவாரத்தில் விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு வழங்க முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை மின் பொறியாளர் லட்சுமணன்(37) என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் பெற்றவர்களை கைது செய்து வந்துள்ள நிலையில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்த கைது வழக்கிலிருந்து தப்பித்து மீண்டும் பணியில் சேர்ந்து எவ்வித பாதிப்புமின்றி பனிக்காலங்களில் நிறைவு செய்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.
தி..முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர், 9842337244
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!