by Vignesh Perumal on | 2025-11-19 06:06 PM
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில், பட்டப்பகலில் ஏடிஎம் மையங்களுக்குப் பணம் நிரப்பச் சென்ற பாதுகாப்பு வாகனத்தைக் கடத்தி, அதிலிருந்த ரூபாய் 7 கோடியே 11 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் மையப்பகுதியான சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குப் பணம் நிரப்பச் சென்ற பாதுகாப்பு வாகனம்.சுமார் 7 பேர் கொண்ட மர்மக் கும்பல் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.ஏடிஎம் மையத்தில் பணத்தைப் பாதுகாப்பாக நிரப்பிக் கொண்டிருந்தபோது, இந்தக் கும்பல் திடீரென சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.கொள்ளையர்கள், வாகனத்தில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம், தாங்கள் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி நாடகமாடினர்.ரிசர்வ் வங்கி அதிகாரிகளாக நடித்து, சில காரணங்களைச் சொல்லி, பணம் இருந்த வாகனத்தில் இருந்தவர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டனர்.பின்னர், ரூ.7 கோடியே 11 லட்சம் ரொக்கம் இருந்த அந்த ஏடிஎம் பாதுகாப்பு வாகனத்தையே அந்தக் கும்பல் பட்டப்பகலில் துணிச்சலுடன் கடத்திச் சென்றது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெங்களூரு காவல்துறையினர், உடனடியாகக் கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.கடத்திச் செல்லப்பட்ட ஏடிஎம் வாகனம், சிறிது தூரம் சென்ற பிறகு கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. ஆனால், அதில் இருந்த ரூபாய் 7.11 கோடி ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.நகரின் மையப்பகுதியில், அதுவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம், பெங்களூருவின் பாதுகாப்புக் குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனங்கள், அவர்கள் பேசிய மொழி மற்றும் அவர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!