by Vignesh Perumal on | 2025-11-19 05:52 PM
கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிஅவர்கள் சந்தித்து, கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழகம் தொடர்பான பல்வேறு முக்கியமான திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
"கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரங்களின் விரைவான வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் மிக முக்கியமானவை. எனவே, மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்தத் திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கி பணிகளைத் தொடங்க வேண்டும்.
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், விரிவாக்கப் பணிகளை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.'
மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைக்க வேண்டும். இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தலாம் என்று அவர் வலியுறுத்தினார்.
பிரதமரிடம் அளித்த இந்தக் கோரிக்கை மனு குறித்து, எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடமும் தெரிவித்தார். இந்தப் பிராந்தியங்களில் உள்ள கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்தத் திட்டங்கள் அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!