by Vignesh Perumal on | 2025-11-19 11:47 AM
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்று (நவம்பர் 19, 2025) காலை ரயில்வே காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், சுமார் 4 கிலோ கஞ்சா மற்றும் 22 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேற்கு வங்க மாநிலம் புருலியாவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி நோக்கிச் செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு ரயில். இந்த ரயில் இன்று காலை திண்டுக்கல் ரயில் நிலையத்தை அடைந்தது.
திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் சக்திசண்முகம், மதுரைவீரன், சரவணகுமார், மதன்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் ரயிலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.முன்பதிவு இல்லாத (Unreserved) பெட்டி ஒன்றில், பயணிகள் இருக்கைக்கு அடியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையைச் சோதனை செய்தபோது, அதில் 4 கிலோ கஞ்சா மற்றும் 22 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா) இருந்தது கண்டறியப்பட்டது.போதைப்பொருட்கள் மற்றும் புகையிலையை உடனடியாகப் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அவற்றை எவ்வித ஆவணங்களுமின்றி கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வடமாநிலத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இந்தக் கஞ்சா மற்றும் குட்காவை கடத்திச் செல்ல முயன்ற நபர்கள், சோதனையைக் கண்டதும் பையை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் ரயில் பயணிகள் மூலம் விசாரணை நடத்தி, கடத்தலில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!