by admin on | 2025-11-18 06:18 PM
*ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் தேசிய தலைவராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு திரு ஜெயந்த் சவுத்ரி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் தேசிய தலைவர் அவர்களுக்கு தமிழக/கேரளா தலைமை பொறுப்பாளர்கள் தமிழ்நாட்டின் சார்பாகவும் கேரள மாநிலத்தின் சார்பாகவும் வாழ்த்தி வரவேற்று நிகழ்ச்சி*
ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் தேசிய அளவில் நிர்வாகிகள் கூட்டம் 16-11-2025 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி மாலை 4 உத்திதிர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காசி கோலன் மண்டியில் தேசிய பொதுச்செயலாளர் திரு திரிலோக் தியாகி அவர்கள் தலைமையில் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராஷ்டிரிய லோக் தல் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தேசியத் தலைவர் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் மாண்புமிகு திரு ஜெயந்த் சவுத்ரி அவர்களை அனைவரின் ஏகோபித்த முடிவின்படி தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார்.இக்கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைமை பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகளிர் அமைப்பின் தேசிய தலைவர்கள் இளைஞர் அணி தலைவர்கள் வழக்கறிஞர் பிரிவு மருத்துவர் பிரிவு விவசாய அணி ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தேசிய தலைவராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு திரு ஜெயந்த் சவுத்ரி மற்றும் அமைச்சர் ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் தேசிய தலைவர் அவர்களுக்கு தமிழக தலைமை பொறுப்பாளர்கள் தமிழ்நாட்டின் சார்பாகவும் கேரள மாநிலத்தின் சார்பாகவும் தமிழகத்தின் ராஷ்டிய ராஷ்டிரிய லோக் தல் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் G ராஜாராம் அவர்கள் பொதுச் செயலாளர் திரு N ரவி பிள்ளை அவர்கள் மற்றும் திரு ஷாஜகான் அவர்கள் கேரள மாநிலத்தின் சார்பாகவும் பொன்னாடை மற்றும் ஏலக்காய் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் சார்பாக தமிழ்நாட்டு துணைத் தலைவர் திரு Dr S.A கார்த்திகேயன் அவர்கள், பொருளாளர் திரு A திருநாவுக்கரசு அவர்கள் மேலும் சேலத்தின் சார்பாக ஆறு பொறுப்பாளர்கள் கேரளாவின் சார்பாக பேராசிரியர் திரு ராம்சாகர் அவர்கள் மற்றும் கோழிக்கோடு திரு சுபேஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பல சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய அற்பணிகள் பற்றியும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றியும் மக்களின் நலனுக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இங்ஙனம்,
N ரவி பிள்ளைபொதுச் செயலாளர் ராஷ்ட்ரிய லோக் தல் RLD தமிழ்நாடு
T. Muthu Kamatchi evidence editor. 9842337244
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு